உறவில் அல்லது ஒருகட்டு விறகில்•••
தென்றல் காற்றே
நீ எனக்கு உயிர் பிச்சையிட்ட தெய்வமே நலன் விசாரிக்க என்னை நெருங்கி நெருங்கி
நீ வரும்போது !
ஒரே பூ வாசனை !
நீ நலன் விசாரித்தப்பின் என்னை விட்டு விலகி விலகி
செல்லும் போது !
ஒரே சோக யோசனை !
நீ என்னை விட்டுப் போகாதே !
ஏனெனில் நான் பட்டுப் போவேனே !
காலம் வழிவிடும் போது
ஓடிவந்து கட்டிபிடிப்பேன் !
அப்போது என்னை விட்டு எட்டிச் சென்றுவிடாதே!
உன்னால் தான் எனக்கு
உயிரென்ற பெயர் வந்தது !
ஆனால் மானிடத்து ஆயுளை நீட்டிக்கும் அதிகாரம் என் கையில் இல்லை என்பதால் மிகவும் வருந்தலானேன் !
நான் உன் உயிராக இருப்பேன் !
உன்னை விட்டு பிரிய நீ வெறும் உடலாகி விடுவாய் !
அப்போது என் உறவில் நீ இல்லாது போவாய் !
ஒரு கட்டு விறகில் வெந்திடுவாய் !
அதைக்கண்டு நான் மனம்
நொந்துப்போவேன் !