நாய் - முக நூல் கவிதைகள் தொகுப்பு 4

என் முக நூல் கவிதைகள் தொகுப்பு
-------------------------------------------------------------

வீதிவரை வீடு
வீதியில காரு
பாதை இல்ல பாரு
மோதி நீ சாவு...
***

மனிதன் காலடி
பதித்த இடத்தில்
நதிகள் வரண்டு போக
பின்னொரு நாளில்
நதிகள் சல சலக்கும்
சோலைகளில் மனிதச்
சுவடு இராது....!
***

வன்மங்கள் களம் மாறியே
பின் தொடருது வேறுருவில்
இங்கு வர்ணங்கள் இல்லை...
இன்னும் பழய அவலை நினைந்து
உரல்கள் இடி படுகின்றன....
***

ஏன் தெரியாததைத்
தெரியாதெனச் சொல்லத்
தெரியவில்லை...?
***
உமிழ்ந்தாகி விட்டது
சுத்தமானது வாய்
வீதி விதி நோக..
***

முக நூல் அ... ஆ
-----------------------------
அன்பர்களைக் கூட்டு
ஆன் லைனில் இரு
இனிதெனச் சொல்
ஈன்றதைப் போடு
உள்பெட்டி உளைச்சல் தவிர்
ஊர் வம்பு வேண்டாம்
எண்ணிக்கை மிக விட
ஏற்றம் மிக்கவர் நலம்
ஐ லைக் கூறு
ஒத்துச் செல்பவர் சேர்
ஓவர் சீன் வேண்டாம்
ஔடதம் இது முகநூலுக்கு
அஃதே பழகு..!!
***
என்னுள் வேண்டாதவைக்
களையக் களைய
நான்.....
நீயும்....
***

எதுவும் புதுசு இல்ல
ஆனா புதுசு தான்
எதுவும் பழசு இல்ல
ஆனா பழசு தான்
***

நிறைய மவுனங்கள் இருப்பதால்
இரைச்சல்கள் அதிகம் கேட்கிறது....
***


ஒவ்வொரு முறை அந்த
வீட்டைக் கடக்கும் போதும்
அந்த நாய் குரைக்கிறது...
***
கறிக் கடை வாசலில்
காத்திருக்கும் நாயும்
கொழுத்திருக்கு.....
***
அந்தக் கறிக் கடை மூடி
பல நாட்கள் ஆகின்றது
யாரும் நாயிடம் சொல்லவில்லை...!
***

எழுதியவர் : முரளி (19-Jun-16, 9:56 pm)
பார்வை : 86

மேலே