என் அழகிய தமிழ் மகள்

செந்தாமரை தேவதை
சிந்திய காதோர முடியை
சரிசெய்து சாலையோரம் வருகையில்
யார் இவள் யார் இவள் என
பிரமன் தைத்துவைத்த அனிச்சைசெயலும்
யார் இவள் யார் இவள் என
பின்மண்டையையும் முன்னின்று கேட்குது

ஏதோ செய்தாளே
எனை ஏதோ செய்தாளே
பித்து ஒன்று பிடித்து
பிள்ளை மனம்செய்தாளே
வானவியலை வளைத்து
வட்ட நிலவும் செய்தாளே

எனை யாரென்று கேட்டேனே
என் பெயரையும் மறந்தேனே
ஏதும் புரியாமல் நின்றேனே
ஏதோ சொல்ல நினைத்தேனே
உன் பெயரை உச்சரித்தேனே
உலகம் நீயென உன் பின்னால் சுத்துறேனே

பேசும் மலரே உன்னால்
பேச்சின்றி மௌனமானேனே
பூங்காற்றை வீசி சென்றாளே
புன்னகையால் மலர்ந்தேனே
மழைத்தூரலாக என் மீது பொழிந்தவளே
மனதோடு காதல்மழையில் நனைந்தேனே

காற்றில் உன் பிம்பம் கண்டேன்
கார்மேக கூந்தலோடுசேர்த்து கட்டியணைத்தேன்
எனக்கு மட்டும் தெரிந்த ஓவியத்தை
என் இதையத்தில் வரைந்தேன் உன் விழியால்
பயணங்கள் உன் பாதம் தொடர
பஞ்சாக பறந்து வருகிறேன் உன்நிழலாக .....!!

எழுதியவர் : ராஜா (19-Jun-16, 7:48 pm)
பார்வை : 75

மேலே