காதலிக்குத் தாலாட்டு

காதலியை குழந்தையாக
அவளின் தாய் தாலாட்டுகிறாள்

கண்ணுறங்கும் தீவழகே
கனியுறங்கும் பூவழகே
ரம்பை ஊர்வசி மேனகைய
கலந்து வைத்த மூவழகே

விண் சொர்க்கத்தில் பிறக்காது
பெண் வர்கத்தில் பிறந்த சொத்தே
நீ சிப்பிக்குப் பிறக்காது
சிற்பிக்குப் பிறந்த முத்தே

வெய்யிலோடும் வயலோடும்
பாட்டிசைக்கப் பிறந்தவளே
மயிலோடும் குயிலோடும்
தேசிய சின்னத்திற்குப்
போட்டியாகப் பிறந்தவளே

அழகா நீ இருக்கேன்னு
ஆணவந்தான் கொள்ளாதே
அழகதனை ஆயுதமாக்கி
ஆணவனைக் கொல்லாதே

உலக அழகிப்போட்டியில் நீ
கலந்துகொள்ளக்கூடாது
உலக அமைதி காத்திடவே
ஆண்களை நீ
கவர்ந்து கொல்லக்கூடாது

பாதையில நீ நடந்தா
போதையில ஊர் நடக்கும்
வீதியில நீ நடந்தா
தன்னில் பாதியின்னு
தேர் கிடக்கும்

லோ கிளாசு பையன நீ
காதலிக்கக் கூடாது
ஏ கிளாசு பையன நீ
கழற்றிவிடக்கூடாது

கண் மைதான் நான்வைப்பேன்
கண்ணாரை மறைத்தபடி
கண்ணடிப்பான் ஆம்பிள்ளைதான்
கண்டுக்காதே முறைத்தபடி

எழுதியவர் : குமார் (19-Jun-16, 7:42 pm)
பார்வை : 253

மேலே