பார்வை

பார்வை..
17 / 06 / 2024

கவிஞனின் பார்வையில் - நீ
கன்னித்தமிழ் கவியானாய்
சிற்பியின் பார்வையில் - நீ
மாமல்ல சிலையானாய்
ஓவியனின் பார்வையில் - நீ
தஞ்சை ஓவியமானாய்
விஞ்ஞானியின் பார்வையில் - நீ
ரசாயன கலவையானாய்
இயற்கை ஆர்வலரின் பார்வையில் - நீ
பசுங்காடுகள் மயில் மானானாய்
அகழ்வாராய்ச்சியாளரின் பார்வையில் - நீ
அபிரீத புதையல் ஆனாய்.
குயவனின் பார்வையில் - நீ
பதமான மண் குழம்பானாய்
உழவனின் பார்வையில் - நீ
செழிப்பான பச்சை வயலானாய்
மருத்துவனின் பார்வையில் - நீ
எலும்போடு சதை பிண்டமானாய்
இறைவனின் பார்வையில் - நீ
சாதாரண படைப்பானாய்.
எந்தன் பார்வையிலோ - நீ
என்னில் பாதியானாய்...!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (17-Jun-24, 7:54 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : parvai
பார்வை : 135

மேலே