ஒரு தலை ராகங்கள்
ஓரிரவில் ஓர் ரயிலில்
புத்தகமும் நானும்
புலவன் எவனாகினும்
எண்ணத்தில் அவனே
எதிரில் நீ...
எனக்கானவன் நீ என்று
தீர்ப்பான பின்னரும்
மேன் முறையீடு
செய்பவள் நான்...
தூக்குக் கைதியின்
கடைசி ஆசை போல்
நம் சில நிமிட தனிமையை
அர்த்தமாக்கப் பார்க்கிறாய்...
உன்னைப் பிடிக்க வைப்பதற்கான பிரயத்தனங்களில்
உனதான நிஜங்களை - நீ
நிரூபித்துக் கொண்டிருக்கையில்
நானோ..
ஜன்னலின் வெளியே
கண்ணிப் பெண்ணின்
நானத்தைப் போல்
சிந்தாமல் சிதறும்
சிதறல்களை
சலனமில்லாமல் பார்த்தபடி
யோசிக்கிறேன்
என்னை ஏன் அவனுக்கு
பிடிக்காமல் போனது...