பள்ளி நினைவு என்னுள்

நினைவெல்லாம் பின்னோக்கி செல்ல....
என்னையறியாமல் என்னுள்ளே எண்ணங்கள் சுழன்றிட...
பருவ வயதில்.. படித்திடும் அழகில்..
பள்ளியெனும் பாசப்பிணைப்பில்...
நான் சுற்றி வந்தேன்...
வகுப்பு தலைவனாய் தலைமை பொறுப்பில்...
ஆண்பால், பெண்பால், இருபாலர் படித்த பள்ளியில்...
அன்பால், பண்பால், நட்பால் நாம் ஒன்றானோம்...
அன்பாய் இருக்கும் நானும்...
ஆவேசமாய் மாறினேன்...
எவர் செய்யும் தவறுக்கும்...
அடித்திடும் உரிமை எவர் தந்தார் எனக்கு...
தண்டித்திடும் உரிமை யார் தந்தார் எனக்கு...
தெரியவில்லை எனக்கு...
என்னை தேர்ந்தெடுத்த என்னாசிரியர்களா...
என்னை ஏற்றுக்கொண்ட என் வகுப்பு நண்பர்களா...
நான் ஏற்றுக்கொண்ட பணிக்கு நான் கொண்ட நேர்மையா...
ஆசிரியர்கள் இருக்கும் போது ஆர்ப்பரிக்கும் நானே...
செல்ல திட்டுக்களை வாங்கினேன்.
அவசர குடுக்கையாய்...
ஆசிரியர் இல்லாத வகுப்பில்...
கூச்சலிடும் நண்பர்களை...
தவறாமல் தண்டித்தேன்...
ஆணென்றும் பாராமல்...
பெண் என்றும் பாராமல்...
இருவரையும் சமமாய் தண்டித்தேன்.
வகுப்பறை தரையில் முட்டிப்போட்டிட...
அதையும் தாண்டினால்...
பள்ளி மண்ணிலே போட வைத்தேன்...
மன்னித்திட மனமில்லாமல்...
மண்டியிட வைத்தேன் வெகு நேரமும்...
தவறுகளை சரிப்படுத்திட...
அவர்களின் வேதனையின் வலியறிந்து...
நான் சாதனையாய் கருதியதில்லை...
அவர்களின் விழிகளில் வடித்த கண்ணீர் கண்டு...
நான் ஆனந்தம் கொண்டதில்லை...
அந்த நொடி மறந்து...
அடுத்த நொடி நட்பாய் வாழ்ந்தோம்.
என்றும் என்னில் இந்நிகழ்வு...
நினைவாய் வாழ்கிறது...

எழுதியவர் : (22-Jun-16, 9:49 am)
Tanglish : palli ninaivu ennul
பார்வை : 119

மேலே