பிச்சை தவறு
இறை தேடும் காக்கைக்கும் விருந்தழைப்பு உண்டு ..
நீ இரந்துண்டு வாழ்வதற்கு இறப்பதே நன்று …
மாற்று திறனாளிகளை பல உயர் பணியில் கண்டு
நீ முதுகெலும்பை வளைப்பது பெரும் மானக் கேடு ..
பார்வை இல்லா மனிதர்களே வியர்வை வர உழைக்க ,
சோர்வெனும் படுக்கையிலே நீ சோம்பல் முறிக்க ,
“ஐயா , சாமியின் ’’ ஆதரவில் நீ அன்றாடம் பிழைப்பது ,
ஐந்தறிவு பிராணிகளில் நீ மனித ரூபம் போன்றது ….