பிச்சை ஏன்
ஊர் விட்டு ஊர் வந்து சீரழிந்தபோதும்,
ரகசியமாய் அவசியத்தை நீ எடுத்துரைத்தபோதும் ,
கவுரவ பிச்சைக்கு உன்னை ஊர் தள்ளுது …..
இயற்கையின் சாபத்தில் வயதாகி போனாலும் ,
இளமையின் கண்ணுக்கு சுமையாக தெரிந்தாலும் ,
திருவோடு மட்டுமே உனக்கு சொந்தமாவுது …….