ரமழான் கவிதைகள் பக்கம் 01--முஹம்மத் ஸர்பான்

.பாவங்கள் நிறைந்த கருமையான உள்ளத்தை
நன்மையெனும் மின்னிடும் தாரகையால்
வெள்ளையாக்கி; இன்மையெனும் தேர்வறையில்
மறுமையின் பிறை நிலவாய் ரமழான் பூத்தது.

தியாகத்தின் மூலம் பொறுமையின் காலம்
தர்மத்தின் மூலம் பேதங்கள் களைந்திடும் சமத்துவம்
நன்மைகள் மூலம் இறையிடம் கையேந்தும் யாசகம்
தாகத்தின் மூலம் ஏழையின் இரைப்பையின் ரகசியம்
இவையெல்லாம் கற்றுக்கொண்டேன் ரமழானெனும் விடியலில்..,

அண்ணளாருக்கு இறைவன் அருளிய தூதின் திருமறை
நாவின் உச்சரிப்பில் உள்ளம் உயிர் பெரும் கருவறை
ஒவ்வொரு சொல்லுக்கும் பன்மடங்காகும் நன்மைகள்
முஸ்லிமின் ஈமானிய தோட்டத்தில் வளரும் இறையச்சம்
பர்ஸக் முதல் மஹ்சர் வரை நிழல் தேடிடும் ரமழான்..,

கண்களின் முத்துக்களில் கண்ணீர் விலையானது
உள்ளத்தின் பாவங்கள் அகற்றும் கடலலையானது
மனிதனை மனிதனாக்கும் பக்குவத்தின் புனிதமானது
நரகத்தின் வாசல் அடைக்கப்பட்டு சுவர்க்கத்தின் வாசல்
ஆன்மீக பல்கலைக்கழகத்தில் பட்டோலை வாங்கும்
கண்ணோட்டம் ரமழான்

கலிமாவின் தோட்டத்தில் தொழுகையெனும் விருட்சங்கள்
ஸகாத் எனும் வானின் மழைமேகங்கள் பாலைநிலத்தில்
தாகத்தால் நிலம் கீறிய விரலால் சலசலவென ஓடிய சம்சமும்
தூதினால் அகிலத்திற்கு அருளப்பட்ட திருமறையின் சுவாசத்தை
நொடிக்கு நொடி உயிரோட்டமாய் கேட்கிறது மனிதனிடம் ரமழான்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (23-Jun-16, 10:01 am)
பார்வை : 1062

மேலே