ஜல்லிக்கட்டு

சங்க காலம் மட்டுமல்ல, பூமியில் தமிழ் இனக்குழு தோன்றிய காலத்திலிருந்து ஜல்லிக்கட்டு நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஆடு, மாடுகள் போன்ற உயிரினங்கள் தமிழரின் வாழ்வில் இரண்டறக் கலந்தது. கால்நடைகளை கடவுளாக மட்டுமல்ல, விவசாய வேலைகள் செய்யும் வேலைக்காரனாகவும் தன்னுடன் விளையாடும் நண்பனாகவும் தமிழன் பார்த்திருக்கிறான். அதனால்தான் தமிழர்கள் அதிகம் வணங்கும் சிவபெருமான், காளையை அடக்கி அதை தன் வாகனமாக பயன்படுத்தினார் என்று ஒரு ஆன்மீக கதையையும் உருவாக்கிக்கொண்டான்.

சிந்துவெளி நாகரீகத்திலும் காளை விளையாட்டு இருந்ததாக கூறுகிறார்கள். மனித இனம் தோன்றிய பல நாடுகளில், காளை விளையாட்டு இருந்திருக்கிறது. இன்றும் பல முன்னேறிய நாடுகளிலும் இவ்விளையாட்டு நடத்தப்படுகிறது ஜல்லிக்கட்டுக்கு ஆதிகாலத்திலிருந்து ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல், எருதுகட்டு என்று பல பெயர்கள் இருந்தாலும், நடைமுறையில் ஜல்லிக்கட்டு என்றும் சில பகுதிகளில் ஏறுதழுவுதல் என்றும் அழைக்கப்படுகிறது. ஏறுதழுவுதல் முல்லை நில மக்களின் பண்பாட்டை சார்ந்தது என்றும், முல்லைநில மக்களின் வீரவிளையாட்டாக இருந்தாலும் காலப்போக்கில் அது தமிழக மக்கள் அனைவருக்குமான விளையாட்டாக மாறியது.இன்று மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, சிவகங்கை மாவட்டங்களில் தொடர்ந்து நடத்தப்படும் விழாவாக இன்று மாறிவிட்டது. குறிப்பாக மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், சிவகங்கை சிராவயல், கண்டிப்பட்டி போன்ற ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாக்கள் எப்போதும் பிரபலமானது. ஜல்லிக்கட்டு காளைகளை பெற்ற பிள்ளைகளுக்கு மேலாக சகல வசதிகளுடன் வளர்ப்பவர்கள் இந்த பகுதியில் அதிகம். அந்த காளைகள் இறந்து விட்டால், அடக்கம் செய்த இடத்தில் கோயில் கட்டி வழிபடுவதும் தொடர்கிறது.

பண்பாட்டுத் திருவிழாவாகவும், மக்களின் சமயம் சார்ந்த திருவிழாவாகவும், இளைஞர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் விழாவாகவும் நடைபெறும் ஏறுதழுவுதலைப்பற்றி சங்க இலக்கியங்களில் சொல்லும்போது, வலிமை வாய்ந்த எருதுகளை ஒன்றுடன் ஒன்று மோதி விளையாடுவதும், அதற்குப்பின் எருதுகளுடன் இளைஞர்கள் மோதி விளையாடி அதை அடக்குவார்கள் என்றும், ஏறுதழுவுதலுக்கு முதல்நாள் அல்லது அன்றைய நாளில் குரவைக்கூத்து நடைபெறும். இளம்பெண்கள் ஏறுதழுவும் வீரன் வெற்றிபெற பாடுவர்கள் என்றும் உள்ளது.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு ஒழுங்கு முறைக்குள் வந்து விட்ட ஜல்லிக்கட்டு அதே வழிமுறைகளுடன் இப்போதும் நடத்தப்படுகிறது. பிரிட்டிஷ் காலத்து நாணயங்களான சல்லிக்காசுகளை மாலைபோல மாட்டின் கொம்பில் கட்டி விடுவார்களாம். மாட்டை அடக்கியபின் அந்த வீரர் சல்லிகளை எடுத்துக்கொள்ளலாம். அதனால் இவ்விளையாட்டுக்கு சல்லிக்கட்டு என்று பேர் வந்தது, அது மருவி ஜல்லிக்கட்டு ஆனதாக சொல்கிறார்கள். முல்லைக்கலி என்ற இலக்கிய நூலில் ஜல்லிக்கட்டை பற்றி அதிகமாக விவரிக்கப்பட்டுள்ளது. அப்போது அதிகமான அளவு காயங்கள், உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டிருக்கிறது. காளையை அடக்கினால்தான் பெண் கட்டுவது போன்ற சென்டிமெண்டுகள் அப்போது சமூகத்தில் நிலவியதால், இளைஞர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனமாக இறந்துள்ளனர். தற்போது அதுபோன்ற நிலை இல்லையென்றாலும், ஜல்லிக்கட்டு மீதான காதல் மட்டும் யாருக்கும் குறையவில்லை. பாரம்பரியமான வீர விளையாட்டு என்று சொல்வதில் நம் எல்லோருக்கும் பெருமை.

ஆரம்பத்திலிருந்தே இந்த நேரத்தில்தான் சில வருடங்களுக்கு முன் அலங்காநல்லூரைச் சேர்ந்த ரங்கசாமி என்பவர் ஜல்லிக்கட்டுக்கு தடைகோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஒரு வழக்கைத் தொடர்ந்தார். இவ்வழக்கில் தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், சுற்றுலாத் துறைச்செயலாளர், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை பிரதிவாதிகளாகச் சேர்த்திருந்தார் ரங்கசாமி.

இவ்விளையாட்டில் ஈடுபடும் இளைஞர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதோடு, காளைகளும் துன்புறுத்தப்படும் என்பதால் இவ்விளையாட்டு தடை செய்யப்பட வேண்டும் என்பதை அவருடைய மனுவில் தெரிவித்திருந்தார். அவரது மனுவை ஏற்று நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இத்தீர்ப்பினால் இவ்விளையாட்டின் மீது ஈடுபாடு கொண்ட தெற்கத்தி மக்களுக்குக் கடும் அதிருப்தி ஏற்பட்டது. தடையை நீக்கக்கோரி உணர்ச்சிகரமான போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதே போல்தான் 2௦௦1ல் ஜெயலலிதா முதல்வராக வந்தபோது கோயில்களில் ஆடு, கோழி பலியிடக் கூடாதென்று அவசர சட்டம் ஒன்றை போட்டார். இதனால் தமிழ் மக்கள் கொதித்தெழுந்தனர். அந்த எதிர்ப்பை கண்டு பயந்து அச்சட்டத்தை திரும்ப வாங்கினார். அதுபோல் இத்தடையும் நீங்கி விடுமென்று தமிழக மக்கள் நினைத்தார்கள். பல போராட்டங்களை இன்று வரை நடத்தி வருகிறார்கள். ஆனால், இதில் இறுதி முடிவெடுக்க வேண்டியது உச்ச நீதிமன்றம் என்பதால் ஆட்சியாளர்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலை


.
வளரும்

எழுதியவர் : (23-Jun-16, 5:17 am)
Tanglish : jallikkattu
பார்வை : 1828

மேலே