வரையறை......


இவன் ஆன்ம சுதந்திரத்தின் -
இரகசிய குறிப்பொலிகள் அடங்கிய,
இடைவெளி எனும் தூசு படிந்த,
இசை தட்டினை......

என்றேனும் காலத்தைக்-
குறிக்கும் முள்ளொன்று,
இசைக்கும் நாளில்...

காலம்,
என் பெயரால்-
வரையறுக்கப்படும்....

நான் யாரென்று ?
யாருக்கும் தெரியாமலேயே....

எழுதியவர் : ரமண பாரதி (22-Jun-11, 11:43 pm)
சேர்த்தது : ரமண பாரதி
பார்வை : 361

மேலே