பாசப்பிரிவு

தந்தையே தந்தையே
தவமாய் ஈன்ற தந்தையே !!

உறவினில் உயர்ந்தவர் நீதானே
என் உயிரினில் கலந்தவர் நீதானே !!

அப்ப நீ எப்போதும் என்னோடு வேண்டும்
நீ பாதி நான் பாதி நிலை தானே வேண்டும் !!

ஒரு விழியாய் தாயாக
மறு விழியாய் நீயாக இருந்தாய் !!


நான் வாழும் பாதையை அமைத்துவிட்டாய்
ஆனால் நீ போகும் பாதையைய் மறைத்துவிட்டாய் !!

அலைபோல உழைத்தாய்
மலைபோல வளர்த்தாய்!!
இப்போ சிலைபோல படுத்துவிட்டாய் அப்பா!!

தாயும் தவிக்க என்மனம் துடிக்க
விதியால் எம்மை பிரிந்துவிட்டாய்
உன் விழிகளை ஏனோ மறந்து விட்டாய் அப்பா!!

ஏழு ஏழு ஜென்மம் நீ வேண்டுமே
எப்போதும் உன் மகனாக வரம் வேண்டுமே !!

கடமை முடிந்ததென உன் கண்களை மூடி விட்டாய்
என் கனவுகள் நிறைவேற உன் காயத்தை மறைத்து விட்டாய் !!

உறவும் இங்கு கதறுதே
உனை கண்டு என்மனம் உருகுதே !!

வறுமையில் என்னை வளர்த்தாய்
வளரும் வரை என்னை காத்தாய்
வாழ்வை அமைத்து கொடுத்தாய் அப்பா !!

உன் பார்வை என் மீது படாத
உன் பாசம் எனக்கு தொடராதா !!

வசதியா வளர்ந்தும்
வாழ்வினில் உயர்ந்தும் !!

உனக்கென ஏதும் சேய்யவில்லை
உனக்கு மகனாக பிறந்தும் பயனில்லை !!

தனியாக விட்டு போகாதே
உன் பிரிவு எனக்கு தாங்காதே!! அப்பா !!அப்பா!!

எழுதியவர் : karthik (24-Jun-16, 11:32 am)
பார்வை : 146

மேலே