ஆலயங்களும் அதிசயங்களும்
ஆலயங்கள் அத்தனையும் அதிசயங்களே
அன்புதனை ஊட்டவந்த பள்ளிக்கூடங்கள்
பள்ளிகொண்ட இறைவனடி வேண்டிநின்றலே
உள்ளவலி போக்குகின்ற உத்தரவாதங்கள்
வானம்தொட்டு நிற்குமிவை வேண்டும்கைகளாய்
தேனைப்போல இனிமையளிக்கும் நம்பியோருக்கு
கானமழை நிதம்பொழியும் காதுகளினிக்க
மானைப்போல துள்ளவைக்கும் மந்திரங்களே
பக்தர்களின் மனங்களுக்கு பரவசமளிக்கும்
பாவமழித்து மோட்சமடைய வழிவகையமைக்கும்
சித்தர்களும் முனிவர்களும் வணங்கியஇடமே
ஆலயங்கள் கொண்டிருக்கும் உதவிடும்மடமே
வேண்டுவதை வேண்டும்படி கிடைத்திடச்செய்யும்
வேண்டாததை விட்டுவிட உதவியும்செய்யும்
வேண்டிடுவோம் அனைவருமே நலமுடன்வாழ
வேண்டுதலை வைத்துவிட்டு நிம்மதியடைவோம்