சந்தை
ஞாயித்துக்கெழம சந்த, நானும்போனேன் ஒருகாலம்
ஏழுமணி போனோமுன்னா பத்துமணிக்கே வந்திடுவோம்
அம்மாவத்தான் கூட்டிக்கிட்டு பள்ளிப்பையன் நானும்போவேன்
சும்மாயில்ல ஒயர்க்கூட நாலெடுத்து போயிடுவோம்
கூட்டம்மிக அள்ளுமுங்க சூரியனும் துள்ளுமுங்க
சந்தைக்குள்ளே நொழையும்போதே நம்மஎங்கோ தள்ளுமுங்கோ
ஒவ்வொருகடையா பேரம்பேசி காய்களுந்தான் வாங்குவாங்க
கூடைக்குள்ள நொப்பிக்குவேன் வெயர்வையத்தான் அப்பிக்குவேன்
தக்காளியும் வெங்காயமும் தேங்காயும் உருளையும்
கூடைக்குள்ள கூடக்கூட எடைமெல்ல ஏறுமுங்க
கிராமத்து மக்களோட பாஷையத்தான் ரசிச்சிக்கிட்டே
சந்தைக்குள்ள சுத்திடுவோம் வாரத்துக்கும் வாங்கிடுவோம்
பாட்டிக்களும் தாத்தாக்களும் கடைகடையா போட்டிருப்பார்
பேரன்களும் பேத்திகளும் அவர்களுக்கு உதவிடுவர்
பேசிவச்ச மாதிரியே வெலையெல்லாம் ஒத்திருக்கும்
ஓசிக்கு மல்லித்தல கொத்துகொத்தா பத்திருக்கும்
ஒருவழியா முடிச்சவுடன் கரும்புஜூசு குடிச்சிருவோம்
வண்டிமுன்னே கூடவச்சு வீட்டுவழி போயிடுவோம்
அடுத்துஒரு வாரம்வரை காய்கறிகள் வந்திடுமே
ஞாயித்த்துகெழமையான மீண்டுமொரு சந்தைக்குத்தான் வந்திடுவோம்....