காணாமல் போன கனவுகள்

ஏற்றம் வாழ்வில் காண்போமென்று
ஏங்கியே காலம் கழிக்கின்றோம்
மாற்றம் ஒருநாள் கிடைக்குமென்று
மயங்கியே பசியால் கிடக்கிறோம்

ஆட்டம் போடும் உலகைக்கண்டு
அழுத படியே வாழ்கின்றோம்
வாட்டம் மட்டும் உடலில்கொண்டு
வாழ்க்கை கடலில் கிடக்கின்றோம்

பூக்கள் பார்த்து ரசிக்கின்றோம்
ஈக்கள் கூட இருக்கின்றோம்
மாக்கள் கூட நலமுடனே
மக்கள் நாங்கள் வருத்தத்துடன்

பரிட்சை ஆச்சு உலகவாழ்க்கை
பாடம் யாரும் நடத்தல
எரிச்சல் ஆச்சு நாட்கள்கடத்த‌
தோல்வி மட்டும் மாறல‌

கனவு எதுவும் எமக்கில்ல‌
கண்ட கனவுகள் பலிக்கல‌
நினைவு உலகம் சரியில்ல‌
நினைத்துப் பார்க்க முடியல‌

கஞ்சிசோறு மட்டும் கனவில்
வந்து வந்து போகுது
அந்தச்சோற மெள்ள இன்றி
இந்த வாழ்வு வேகுது

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (25-Jun-16, 9:13 am)
பார்வை : 1817

மேலே