நினைவில் நின்ற பயணம்

மூணாப்பு படிக்கையிலே பள்ளிக்கூடச் சுற்றுலா
கருவூரில் ரயிலேறி எலமனூர் வந்தடைந்தோம்
தக்காளிசாதமும் எலுமிச்சை சாதமும் கட்டிக்கிட்டு
குடிக்கத்தண்ணி கொஞ்சம் கூடவே எடுத்துக்கிட்டு
பள்ளிக்கூட பசங்களெல்லாம் ரயிலவிட்டு எறங்கிவந்தோம்
கூடவே ஆசிரியர்கள் அதீத கவனமுடன்
எங்களைத்தான் வழிநடத்தி பாலமேறி நடத்திவந்தார்
பாலத்தை கடந்தவுடன் எங்கெங்கும் மரங்களப்பா
மரம்விட்டு மரம்தாவும் குரங்குகளும் நிறைந்திருக்க‌
ஆலமர நிழலினிலே அமர்ந்தே காலையுணவுண்டோம்
ஓடியாடி விளையாண்டோம் இயற்கைகாற்றை சுவாசித்தோம்
குதித்தோடும் காவிரியை பயத்தோடு பார்த்துவந்தோம்
நடந்துநடந்து நாங்கள் எல்லாஇடமும் சுற்றிப்பார்க்க‌
மதியமும் ஆனதுவே வட்டமிட்டே அமர்ந்துண்டோம்
குடுத்த கட்டணத்தில் பாதிமட்டும் செலவாக‌
அடுத்த நாளதனை அனைவருக்கும் திருப்பித்தர‌
அடுத்திருந்த பள்ளிசென்று பத்துபைசாவுக்கும் தின்றுவந்தோம்..
இப்பொழுது நினைத்தாலும் அப்பயணம் மிகரசனை
நினைவிலாடும் ஊஞ்சலாக எழுதச்சொல்லும் கெஞ்சலாக....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (25-Jun-16, 10:40 am)
பார்வை : 82

மேலே