குழந்தை

வாழ்க்கையை வாழத்தெரியாதவர்கள்
இவர்கள்..
குழந்தையை ரசிக்கத்தெரியாதவர்கள்
குழந்தையின் குறும்புகள்
கோபம் கொடுத்தால்
நீங்கள் கடவுளை அடிக்கத் தயாராகிறீர்கள்
அழுகை கண்ணுக்கு நல்லதாம்
குழந்தை அழுதால் அது
மனதுக்கு நல்லதல்ல...
குழந்தையின் பிறப்பில்
கடவுள் தினம் தினம்
உலகில் தோன்றிக்கொண்டே இருக்கிறார்...
குழந்தையின் முதல் மழலைச்சொல்
கொடுக்கும் சந்தோசத்தை
கோடி ரூபாயும் கொடுக்காது
குழந்தையின் முதல் எட்டு
எல்லோரையும் பூரிக்கவைக்கும்
விழுந்துவிட்டால் கொஞ்சவைக்கும்
குழந்தை இருக்கும் வீடு
இனிமை பொங்கும் வீடு
மகிழ்ச்சி தங்கும் வீடு
குழந்தைகளை நேசியுங்கள்..
எல்லாக் குழந்தைகளையும் நேசியுங்கள்
எல்லோரையும் குழந்தையை போல நேசியுங்கள்