தேவதை

தேவதைகள் கடவுளால் தேர்வு செய்யப்படுகிறார்கள்
ஒவ்வொரு வீட்டுக்கும் மகளாக அனுப்பி வைக்கப்படுகிறார்கள்
அவர்களது புன்சிரிப்பில் வீடே பூரிக்கும்
அவர்களது மழலைமொழிக்கு வீடே தலையசைக்கும்
அவர்களது அழுகைக்கு வீடே வருந்தி நிற்கும்
அவர்கள் விளையாட வீடே சேர்ந்து விளையாடும்
அவர்கள் வளர வளர அடம்பிடிப்பார்கள்
அவர்கள் வளர வளர எதிர்த்து பேசுவார்கள்
அவர்கள் அப்பப்போ முறைத்துக் கொள்வார்கள்
அவர்கள் மீண்டும் சகஜம் ஆவர்கள்
தேவதைகள் அனைவருமே நன்றாகவே படிப்பார்கள்
வீட்டு வேலை சொன்னால் எள்ளும் கொள்ளுமாக வெடிப்பார்கள்
தேவதைகள் சிறிது சிறிதாக வளர்ந்து
பெரிய பெண்ணாக‌ மாறுவார்கள்..
சிறிது காலம் சென்றதும் அவர்களின் இளவரசனை கண்டதும்
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் டாட்டா காட்டியபடி
கண்ணீரை பரிசளித்து காரேறி சென்று விடுவார்கள்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (25-Jun-16, 10:46 am)
Tanglish : thevathai
பார்வை : 3745

மேலே