வெளிச்சம்
வெளிச்சக்கீற்று இரவை மெல்லத் தோலுரிக்கும்
கருவண்ணத்தை ஒளி வண்ணமாக்கும்
இருமை ஒழித்து ஒளியாட்சி ஏற்கும்
மனதிலும் விழுக தெளிவு பிறக்கும்
வெளிச்சம் தவிர்க்க முடியாதது
வெளிச்சம் தவிர்க்க கூடாதது
வெளிச்சம் படர உண்மை விளங்கும்
வெளிச்சப்பூக்கள் நிறைந்த தோட்டமிந்த பூமி
வெளிச்சம் மட்டுமே நிழலை அடையாளம் காட்டும்
வெளிச்சம் நிழலின் பிரம்மன்
வெளிச்சமே குழந்தைக்கு துணை
வெளிச்சம் பற்றி பேசும் போதெல்லாம்
இருளும் கூடவே வரும்...
அப்போ... இருள் கூட வெளிச்சத்தின் தோழனா...!!
விவாதிக்க வேண்டிய விஷயம்..
வெளிச்சமே நம்மை நமக்கு அடையாளம் காட்டும்
கிட்ட நெருங்கும் கூடாத பேய்களை ஓட்டும்
வெளிச்சம் ஒரு பேயோட்டி
விளக்கு வெளிச்சம் கூட சில விட்டில்களின் உயிர்தின்னும்
அது வெளிச்சத்தின் தவறா..
விட்டில்களின் தவறல்லவா..
வெளிச்சம் ஒரு நம்பிக்கை..
அதில் லயித்திருப்போம்
வாழ்வில் ஜெயித்திருப்போம்....