தாகம்
தலைவனின் தாகம்
மக்களை நல்வழிப் படுத்தும்
தொண்டனின் தாகம்
தலைவனின் வழிமட்டும் நடக்கும்
கவிஞனின் தாகம்
புதுப்புது கவிதைகள் கொடுக்கும்
இளைஞனின் தாகம்
லட்சியம் ஜெயித்திட உதவும்
விஞ்ஞானியின் தாகம்
அரிய கண்டுபிடிப்புகள் அளிக்கும்
ஞானியின் தாகம்
ஆழ்ந்த சிந்தனைகள் படைக்கும்
மீனவன் தாகம்
ஆழ்கடல் மீன்களை பிடிக்கும்
உழவனின் தாகம்
விவசாய் உற்பத்தி பெருக்கும்
மருத்துவன் தாகம்
தீராத நோய்களைப் போக்கும்
போதகன் தாகம்
தீமையை மனம்விட்டு நீக்கும்
லட்சிய தாகமே
என்றும் எல்லோருக்கும் வேண்டும்
முயற்சியின் வேகவே
அதனை அடைந்திட உதவும்