உலகமே உனது மனை•••
உன்னை நீயே தட்டிக்கொடுத்து !
உன் உள்ளமதை நீயே கட்டுப் படுத்து !
உன் ஆசையை நீயே
மட்டுப்படுத்து !
உனக்கு எட்டாததை நீயே
விட்டுக்கொடுத்து !
உனக்கு எட்டியதில் வாழ் உன் உள்ளத்தைக்
கொட்டிக் கொடுத்து !
உனக்கு நீயே துணே !
கடவுளையும்
உன்னோடு பிணை !
அரிக்காது உன்னை
ஒரு சுணை !
இவ்வுலகமே
உனது மனை !
உயர்ந்தாலும்
தாழ்ந்தாலும்
என்னாளும்
அவ்வாரே நினை!
காப்பவன் காப்பான் காக்கும் நேரத்தில் மறக்காமல் உனை!