அக்கற்புக்கரசிக்கு•••
கங்கையில்
மங்கையவள் நீராட !
அவள் மின்னுமேனி
யையிரு கண்கள் திங்க !
புங்கை மரமறைவில்
ஒரு வேங்கை !
அதனை நோட்டமிட்ட நங்கை !
அக்கங்கையிலேயே
முங்கி மூச்சு முட்டி
மயங்கி மிதந்தாள் !
அவ்வேங்கை பாய்ந்தவளை வேட்டையாடுமுன்னே !
கங்கையில் நீராடச் சென்ற மங்கையின் உடன் பிறப்புக்கள்தன் தங்கையைத்தேடிவர வேங்கையின் விபரீத மறிந்து வெட்டிச் சாய்த்தனர் !
மிதந்துக்கிடந்த தங்கையை மீட்டுக் காத்தனர்!
தக்க தருணத்தில் வந்ததினால்
கற்புக்கோர்
கலங்கமில்லை
அக்கற்புக்கரசிக்கு !