வஞ்சித்துறை பெண்ணொருத்தி பின்னால்

வஞ்சித்துறை ..

பெண்ணொருத்தி பின்னால்
ஆணொருவன் சென்று
மணக்க ஆசைகொண்டால்
தவறு ஒன்றுமில்லை

மணக்க ஆசையில்லை
என்றவளும் சொன்னால்
புரிந்துகொன்டு அவளை
விட்டுச் செல்லவேண்டும்

உனக்கவள்மே லாசை
இருந்துவிட்டால் போதா
அவளுக்குன் மேலாசை
இருக்கவேண்டும் மனிதா

விட்டவளை தனியே
விலகிச் சென்றிடாமல்
பார்த்திருக்கப் பலர்முன்
புத்தி கெட்டுப்போக

பட்டப் பகல்நேரம்
வெட்டிக் கொலைசெய்தால்
சட்டமுன்னை ஓர்நாள்
தண்டித்தே தீரும்

காதலென்று சொல்லி
மோகவலையில் வீழ
சோகமினி உன்னை
வாழ்வில் வந்துதாக்கும்

எழுதியவர் : (26-Jun-16, 12:56 pm)
பார்வை : 37

மேலே