தினம் ஒரு பாட்டு இயற்கை - 18 = 146

தென்றலோடுதான் தோகை விரித்துதான்
ஊத்துது - வான் மழை ஊத்துது !
வெட்கப் பட்டுதான் பூமி பந்துதான்
வெளுக்குது - புழுதியை வெளுக்குது !

ஆகாயம்தான் அதன் செயல் பாடுதான்
அசத்துது - உலகை அசத்துது !
கார் காலம்தான் மேக ஊர் கோலம்தான்
நடத்துது – வானில் சரசம் நடத்துது !

வானிலுள்ள விண்மீன்களை
எண்ணிச் சொன்னவர் யார் ?
மின்னும் மின்னல் கொடியை
அள்ளி முடிந்தவர் யார் ?

சுட்டெரிக்கும் சூரியனின்
கிட்டே சென்றவர் யார் ?
வட்டச் சங்கு நிலவைப் போல்
வசிகரிப்பவர் யார் ?

வானமென்பது வட்டமானது – அதை
திறந்துப் பார்ப்பது கஷ்ட்டமானது !
நாளையென்பது விழி விழித்தப்பிறகுதான்
வானை வெல்வதென்பது பகல் கனவுதான் !

கார்மேக கூரைகள் வானை வேயும்போது
வானின் நீலநிற சாரம் கருமையாக மாறும் !
காற்றடிக்கும் வேகத்தை தாக்குப் பிடிக்காமல்
கண்ணுக் கெட்டா தூரம் கலைந்தோடிப் போகும் !

நிலையாய் நிற்பது நீல நிறம்தான் – அதன்
பிம்பம் விழுவதால் கடலும் அதே நிறம்தான் !
சொலையாய் கிடைப்பது பலா கனிதான் – அதன்
தலை முழுவதும் ஒரே முள் வேலிதான் !

இராத்திரி நேரத்தில் இன்ப நாடகம் நடத்த
இருளை தந்து உதவுது வானம் !
ஆத்திரம் கொண்டு அழகுப் பெண்ணில்
தோத்திரம் பாடுது வெண்மை மேகம் !

வானத்தின் வாசல் திறக்கையில்
வைகறை வேளை பூமியில்;
வானத்தை தாங்கிப் பிடிப்பதில்
பூமிக்கு ஓர் பங்கெனில்..

மறுப்பவர் யார் இதை ?
இருப்பவரை நீ உதை !
சளிக்காது பெண்ணின் சதை
முளைக்காது நீரின்றி விதை !

எழுதியவர் : சாய்மாறன் (26-Jun-16, 1:25 pm)
பார்வை : 144

மேலே