புல்லாங்குழலே

குழலே குழலே
உனை தனிமை பார்த்து நகைத்ததோ
அல்லாதோர்
வெறுமை பார்த்து திகைத்ததோ

குழலே குழலே
மாய கண்ணன் கைகளில் நீ...
தவழ்ந்து ... தவழ்ந்து ..அஃதோர்
காற்றினில் இசையை பூத்தாய்
விரல்கள் பட்டு வெறுமை மறைத்தாய்
தனிமை வெறுமை எங்கோ?

குழலே குழலே
பொழுது புலர்ந்தது நாதத்தில்
தர்மம் தழைந்தது வேதத்தில்

குழலே குழலே
கண்ணனின் தனிமை மயக்கி
வெறுமையாய் வீற்றிக்கும்
குழலே ...புல்லாங்குழலே

எழுதியவர் : -ஐ- (27-Jun-16, 3:01 pm)
பார்வை : 73

மேலே