தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் - 47 = 147

“காலைநேர கடலினோர வெண்மேகமே !
மாலைநேரம் மழைதூவ நீ வா மேகமே !”

“மேகராகம் பாடுகின்ற சோமநாதனே !
இனி மோகராகம் பாடவேண்டும் காளிதாசனே !”



சித்திரை திங்கள் சக்கரைப் பொங்கல் வெக்கிறப் பாவையே
உன்முத்த முத்திரைகள் மொத்தமாக எனக்குத் தேவையே !

பத்திரம் பண்ண வந்திருக்கும் சக்கர நாதனே
பத்திரமா என்முதுகில் முத்திரை குத்துறயே !

ஆடிமாத காத்தடிச்சி அலைமோதுனா - அதுல
ஆர அமர நாம அமர்ந்து காதல் பேசலாம் !

ஆடி முடிஞ்சி ஆவணி பொறந்தா தாலி கட்டிடு
அடுத்த வருஷ ஆடிக்கெல்லாம் புள்ளை பெக்கலாம் !


அன்புக்காக ஏங்குகின்ற அன்னவாசமே
அளவிடாத அன்பு நமது என்றும் வீசுமே !

எனக்காக வாழுகின்ற ஜீவ நாதமே
உறங்காத இரவுகளால் ஏகபோகமே

நீ வருகின்ற பாதையில் மலர் தூவினேன்
மலர்மீது உன்பாதம் மெல்ல ஏவினேன் !

ஆத்மராகம் பாடி தோல் சாய்கிறேன்
ஆடும்வரை ஆடி பேர் வாங்குவேன் !

எழுதியவர் : சாய்மாறன் (27-Jun-16, 3:55 pm)
பார்வை : 59

சிறந்த கவிதைகள்

மேலே