ஐயெழுத்து - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஐயெழுத்து
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  26-Mar-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Dec-2015
பார்த்தவர்கள்:  887
புள்ளி:  43

என் படைப்புகள்
ஐயெழுத்து செய்திகள்
ஐயெழுத்து - எண்ணம் (public)
12-Apr-2023 6:28 pm

அகப்பொருள் காணும் முன்னே 
புறப்பொருள் கண்டு வியந்தேனடி 
உன் காரிருள் கண்களில்  
எழுத்து  அசை
இசை விசை 
சீர் தளை அடி
நொடி முள்   
மோனைத் தொடை 
இடை  உடை 
நடை முறை 
பிறை  நரை 
முடியும்  வரை 
நம் காதல் கனா கண்டேனடி 

மேலும்

ஐயெழுத்து - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2019 11:51 pm

'பசியின் கதறல்'

துடிக்க மறுக்கும்
இதயம்
மெலிந்து போன
உடல்
ஒளிந்து கொண்டு
ஓரமாய் ஒட்டி
கிடக்கும் குடல்

வெறுமையான திடல்
வெடித்து ஒழுகும்
பாதம்
தின்ன தென்படவில்லை
ஒரு பிடி சாதம்

வேதம் ஓதும்
ஆசான் கடத்தினை
வயிறென சுமந்து திரிகிறான்
நீர்க்கு கூட
வழியின்றி
வறட்சியான
குட்டைகளை
தேடி...
குடத்தினை சுமக்கிறோம்

தின்னு...தின்னு
வெறுத்தபடி
கடவுளுக்கு
விருதமாம் ஒரு
கருத்தின்படி

குறி மூட
கையளவு ரவிக்கை
அற்று கடக்கும்
இரவும்,பகல்களும்
கொடுமைகளின்
எச்சம்.
வறுமையின்
உச்ச வரம்பு
மீறி உலா
போகும் விதி

பசிக்குது வயிறு
அந்த வலியை
பற்றி உ

மேலும்

ஐயெழுத்து - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2019 11:50 pm

ரவும் பகலும்
அதுவும் அவனும்
இதுவும் அவளும்
கூகிள் தர்ஸ்டீ தேடல்
எக்ஸ் ஒய் மழை
மறையும் பிழை
ஆயர் கலை
எயிட் ஸ்கோயர்
முதுமை துளை
உடலும் உடலும்
ஒரு ஆடை அவிழிந்த
அத்வைதம்
தினறும் பஸுல்
தினமும் சிஸ்ஸில்
ஹாஸ்ஸில் பிரீ ஹக்
இஸ் நாட் "ஏ" பாக்
திரை துற
அறை மூடு
வெளிச்சம் படர்
இதழும் இதழும்
மைக்ரான்களின் மைனஸ் டிக்ரீ
குளிர் தாங்க
அணுக்களின் இக்கன பிழை
கற்பும் கேம்ஃபர்
எரித்தால்
திசுக்கள் கூசும்
கிஸ் கிசு...
ஏறும் தழுவும்
விரல்கள் நீட்டி
மெஜாரிட்டி நின்று
லைக்கும் டேட்டிங்
பெண்ணுக்கு ஆண் கியூ
ஆணுக்கு பெண் கியூ
இட்ஸ் ஆல் "ஏ"
த்ரீ சிக்ஸ்ட்டி டிக்ரீ வியூ

மேலும்

ஐயெழுத்து - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2019 11:49 pm

அங்கும் இங்குமாய்
தரவு இறங்கிய மனம்
தத்தளித்தது கண்ணீர் தொட்டியில்
உன் நிழல்தனை தேடித்தான்
நிஜமாய் வந்தேன்
வந்து என்ன பயன்
நீராவியாய் கரைந்து போனாய்
வெப்பம் குறைந்த காற்றழுத்ததால்
இதயம் நிலை குழைந்தது
என் நிழல் என்னை
சுடுகிறது அனலாய்
தனிமையின் போதையில்
துயில் எழுகிறேன்
போதி மரம் தேடி
அலைகிறேன் வீதி.. வீதியாய்
அனல் அடுப்பின் மேல்
இட்லியாய் வெந்து
கொள்ளும் இந்த வாழ்கை
கண் இழந்த கரையான் போல்
புற்று ஊன்றி வைத்துள்ளது
இந்த ஏக்கங்கள்
கடிகாரங்கள் கூட
அதன் அளவு ஏற்ப
ஜோடி முட்களாய்
கோட்பாடுகள் கொண்ட
இடைவெளியில்
சுற்றி வருகின்றனவே
ஏனோ என் பொன் நேரம்
போர்வை

மேலும்

ஐயெழுத்து - ஐயெழுத்து அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Nov-2016 3:23 am

ஓட்டு போட கியூ
பட்டு பாட கியூ
நோட்டு எடுக்க கியூ
ரேஷன் வாங்க கியூ

டிஜிட்டல் சினிமா கியூ
சாமி கும்பிட கியூ
ஜாதகம் பார்க்க கியூ
குறி பார்க்க கியூ

சரி பார்க்க கியூ
சிம்மு வாங்க கியூ
ரம் வாங்க கியூ
நகை வாங்க கியூ
நகை வைக்க கியூ

சிட்டு கட்ட கியூ
டியூ கட்ட கியூ
பாஸ்போர்ட் வாங்க கியூ

குண்டலினி சாமி கியூ
யோகா மாஸ்டர் கியூ
விபூதி சாமியார் கியூ

பொண்ணு பார்க்க கியூ
டைவோர்ஸ் அப்பளை கியூ
முதியோர் இல்லத்தில் கியூ

ஓ ! இது தான் கியூபிக் சிஸ்டம் போலும் !!

மேலும்

நன்றி தோழா! 21-Nov-2016 9:00 pm
நன்றி தோழா! 21-Nov-2016 9:00 pm
நிதர்சனமான வரிகள்.....இன்னும் எழுதுங்கள்....வாழ்த்துகள்.... 21-Nov-2016 4:43 pm
காத்து நின்று கால்கள் மட்டுமின்றி மனமும் நொந்து போன கதை 21-Nov-2016 9:23 am
ஐயெழுத்து - ஐயெழுத்து அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Nov-2016 2:57 pm

மூச்சே... மூச்சே
முனைத்து கொடு
அவள் முகம் பார்த்து
காதல் சொல்லி செழித்துவிடு

கண்ணின் பொய்யால்
பெண்ணின் மையில்
துடிக்கவும் மறந்துவிடு

கால வேடம்
கோபம் காகிதம்
தினமும் கிழித்துவிடு

பரிதாபம் பாய்விரித்து
ஆகாயம் மடியில்
படுக்கவும் பயந்து நின்றேன்

வெட்கம் கொன்று
சொர்கம் வாங்க
அலைந்து நின்றேன்

கொஞ்சம் ...கொஞ்சம்
காதல் மறந்து
நெஞ்சம் ... நெஞ்சம்
நெகிழ்ந்து வாழவும்
தெரிந்து கொண்டேன்

காதல் இச்சை
கடந்து விட்டேன்
வாழ்கை பிட்சை
ஏந்தி நின்றேன்

உடலினை மறித்து
உயிரை துறக்கவும்
துணிந்துவிட்டேன்

என்னில் ஏனோ
என்னில் ஏனோ...
இத்தனை காயம

மேலும்

சுவாசம் ஒரு கவிதையானால் காதல் அதில் ஓர் ஹைக்கூவே 22-Nov-2016 9:06 am
நன்றி தோழா! 21-Nov-2016 8:59 pm
நன்று... கவிதை நடைக்கு சற்று மாற்ற முயற்சியுங்கள்... 21-Nov-2016 6:34 pm
அருமை.....இன்னும் எழுதுங்கள்....வாழ்த்துகள்.... 21-Nov-2016 4:09 pm
ஐயெழுத்து - ஐயெழுத்து அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Aug-2016 2:24 pm

செல்
கவனி
நில்


சந்திரன்
விழிப்பதற்குள்
சூரியனுக்கு
அவசரம்...

அவசர
மனைவிக்கு
ஆபாச கவிதை
"விபச்சாரம்"

அவசரமான
பிராத்தனை
பலன்களுக்கு
காத்திருக்கவும்


தென்றலின்
அவசரத்தால்
விதவையானது
ரோஜா செடி


இருவரின்
அவசரம்
ஒருவருக்கு
பத்து மாத
தண்டனை


நிதானம்
தவறியது
மூளை...
அவசரமாய்
துடிக்கும்
இருதயம்

ஒரு
அவசரமான
சொல்
பிரதானமான
போரினை
துவக்கியது


அர்ச்சகரின்
அவசரத்தால்
மறைந்தது
தீபம்


கோடை
மழையில்
அவசரமாய்
ஒரு வானவில்

மேலும்

மிக்க நன்றி நண்பா... 12-Aug-2016 12:03 pm
அனைத்தும் அழகான வரிகள் 11-Aug-2016 10:38 pm
நன்றி நண்பா... 11-Aug-2016 8:03 pm
துளிர் விடும் தளிர் வரிகள் அருமை! வாழ்த்துக்கள் .... 11-Aug-2016 4:27 pm
ஐயெழுத்து - ஐயெழுத்து அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Aug-2016 2:24 pm

செல்
கவனி
நில்


சந்திரன்
விழிப்பதற்குள்
சூரியனுக்கு
அவசரம்...

அவசர
மனைவிக்கு
ஆபாச கவிதை
"விபச்சாரம்"

அவசரமான
பிராத்தனை
பலன்களுக்கு
காத்திருக்கவும்


தென்றலின்
அவசரத்தால்
விதவையானது
ரோஜா செடி


இருவரின்
அவசரம்
ஒருவருக்கு
பத்து மாத
தண்டனை


நிதானம்
தவறியது
மூளை...
அவசரமாய்
துடிக்கும்
இருதயம்

ஒரு
அவசரமான
சொல்
பிரதானமான
போரினை
துவக்கியது


அர்ச்சகரின்
அவசரத்தால்
மறைந்தது
தீபம்


கோடை
மழையில்
அவசரமாய்
ஒரு வானவில்

மேலும்

மிக்க நன்றி நண்பா... 12-Aug-2016 12:03 pm
அனைத்தும் அழகான வரிகள் 11-Aug-2016 10:38 pm
நன்றி நண்பா... 11-Aug-2016 8:03 pm
துளிர் விடும் தளிர் வரிகள் அருமை! வாழ்த்துக்கள் .... 11-Aug-2016 4:27 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே