பசிக்குது வயிறு
'பசியின் கதறல்'
துடிக்க மறுக்கும்
இதயம்
மெலிந்து போன
உடல்
ஒளிந்து கொண்டு
ஓரமாய் ஒட்டி
கிடக்கும் குடல்
வெறுமையான திடல்
வெடித்து ஒழுகும்
பாதம்
தின்ன தென்படவில்லை
ஒரு பிடி சாதம்
வேதம் ஓதும்
ஆசான் கடத்தினை
வயிறென சுமந்து திரிகிறான்
நீர்க்கு கூட
வழியின்றி
வறட்சியான
குட்டைகளை
தேடி...
குடத்தினை சுமக்கிறோம்
தின்னு...தின்னு
வெறுத்தபடி
கடவுளுக்கு
விருதமாம் ஒரு
கருத்தின்படி
குறி மூட
கையளவு ரவிக்கை
அற்று கடக்கும்
இரவும்,பகல்களும்
கொடுமைகளின்
எச்சம்.
வறுமையின்
உச்ச வரம்பு
மீறி உலா
போகும் விதி
பசிக்குது வயிறு
அந்த வலியை
பற்றி உங்களுக்கு
என்னங்கடா
தெரியும் மயிறு...
பசிக்குது வயிறு!!