எங்கு இங்கு மனிதம்
நகரங்களும்
மாநகரங்களும்
மட்டுமே
ஒப்புக்கு
ஒப்பித்துக்கொண்டிருக்கிறது
இங்கு
சாதி மதம் பிரிவினை
இல்லையென்று
மாறாக
நம் கிராமங்களிலோ
சாதி மதம் பிரிவினைகளே கூறுபோட்டு ஆட்சி செய்கிறது
இதனை பயன்படுத்தி
தேசவிரோத கூட்டம்
செழிப்பாய் வாழ்கிறது
இதனுள் சிக்கிக்கொண்டு
அப்பாவி மக்கள் கூட்டம்
சருகாய் சாய்கிறது
பிறகு
எங்கு இங்கு
மனிதம் வாழ்கிறது