அவசரம்

செல்
கவனி
நில்


சந்திரன்
விழிப்பதற்குள்
சூரியனுக்கு
அவசரம்...

அவசர
மனைவிக்கு
ஆபாச கவிதை
"விபச்சாரம்"

அவசரமான
பிராத்தனை
பலன்களுக்கு
காத்திருக்கவும்


தென்றலின்
அவசரத்தால்
விதவையானது
ரோஜா செடி


இருவரின்
அவசரம்
ஒருவருக்கு
பத்து மாத
தண்டனை


நிதானம்
தவறியது
மூளை...
அவசரமாய்
துடிக்கும்
இருதயம்

ஒரு
அவசரமான
சொல்
பிரதானமான
போரினை
துவக்கியது


அர்ச்சகரின்
அவசரத்தால்
மறைந்தது
தீபம்


கோடை
மழையில்
அவசரமாய்
ஒரு வானவில்

எழுதியவர் : -ஐ- (11-Aug-16, 2:24 pm)
Tanglish : AVASARAM
பார்வை : 347

மேலே