திருப்புகழுக்கு புகழிசை

திருப்புகழ் பாடிய வாய் மணக்கும் - அதில்
திருமொழி முருகன் எழில் இனிக்கும் !

கவிச்சரம் தனித்து இசைபாடும் - அதில்
அருட்சுரம் இயைந்து நசை காணும் !

திருவரமாய் சந்தங்கள் சரசம் ஆடும் - அதில்
திவ்விய தரிசனமாய் திருவுரு விழி கூடும் !

சொல்வளம் சுவைவளம் பெருகி ஓடும் - அதில்
பல்வளம் ஓங்கி நல்மனம் உள்ளொளி நாடும் !

கருச்செறிவு கந்தனின் அறுபடை வரிக்கும் - அதில்
செவிப்பறை பனித்து அருட்சிறை ஒழிக்கும் !

அறப்பொருள் அணியாகி ஆவி சபிக்கும் - அதில்
பரம்பொருள் தணிந்து அருள் சுரக்கும் !

அருளிய அருணகிரி நாதனின் கொடையால்
அகிலம் உள்ளவரை தமிழிசை வெல்லும் !

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (11-Aug-16, 2:23 pm)
பார்வை : 62

மேலே