மழையின் அவலம்

பருவமழை பெய்ய மறந்து விட்டால்

பாவி மழை ஏன்தான் இன்னும் பெய்யவில்லையோ

என்று ஒரு வசை மாறி பொழிந்திடுவர்


பருவத்தில் பெரும் மழையாய்

பெருங்காற்று மின்னல் இடியுடன்

பேய்ந்திட்டால் அப்போதும் வைவர்

இது என்ன மழையோ

நம்மை வாழவந்ததா அல்லது மாய்க்க வந்ததா

என்று மீண்டும் வசை மாரி

ஆனால் மழையே பெய்யாமல் போனாலோ

மாரியை வேண்டி பொங்கல் வைப்பர்

சிலர் ஆலயங்களில் வேள்வி செய்வர்

இந்திரனையும் வருணனையும் வேண்டி

இன்னும் ஏதேதோ செய்வர்

மழையே வா வா என்று வான் அதிர கூவிடுவார்

பின் பெரும் மழை வந்தால்

வெள்ளமாய் மாறினால் மீண்டும்

துன்பத்தால் ஓலம் வசை மாரி

மனிதரே பொதுமையா இனி நான்

சில காலம் வராமலே போகிறேன்

இந்த உங்கள் வசை மாரி என்னால்

இன்னும் தாங்க முடியாதப்பா

மாரிக்காய் இனி வேண்டாதீர்

நான் தரும் பெரு நீரை

சரியாக பயன் படுத்திக்கொள்ள

பக்குவம் தெரியாமல்

வெள்ளமாய் என்னை வளரவிட்டு

நீங்களே உங்களை மாய்துகொள்வது ஏனோ

இனி நான் இப்போதைக்கு வரமாட்டேன்

என்னை சரியாக பயன் படுத்திக்கொள்ள

உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்

அப்போது மீண்டும் வருவேன்

நீங்கள் வசை இன்றி என்னை அழைத்தால் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-Aug-16, 2:05 pm)
Tanglish : mazhaiyin avalam
பார்வை : 93

மேலே