விஞானம், மெய்ஞானம்

விஞானம் கொண்டு மண், விண்

மற்றும் மண்ணிற்கும் கீழே பாதாளம்

கூட சென்று 'அவன்' படைத்த பொருளெல்லாம்

ஆராய்ந்திடலாம் பின்னே

ஆழ்கடலில் ஒரு சிறு மீன்

அந்த ஆழ்கடல் நீரை எல்லாம்

விழுங்கி விட்டால் போல்

எண்ணுவது ஓக்க

மூவுலகை விஞானம் வென்று விட்டது

என்று கூறுவதை சற்றே நிறுத்தி

தன் உள்ளமாம் ஓர் உலகை

இந்த ஞானத்தால், விஞானத்தால் அலசிடவே

தெளிவாகும், அஞானம் எல்லாம் போக்கும் பரஞானம்

அதுவே மெய்ஞானம்

அதுவே விஞானம் தேடும் இறை ஞானம் ..

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (11-Aug-16, 3:26 pm)
பார்வை : 73

மேலே