அவள்

அங்கும் இங்குமாய்
தரவு இறங்கிய மனம்
தத்தளித்தது கண்ணீர் தொட்டியில்
உன் நிழல்தனை தேடித்தான்
நிஜமாய் வந்தேன்
வந்து என்ன பயன்
நீராவியாய் கரைந்து போனாய்
வெப்பம் குறைந்த காற்றழுத்ததால்
இதயம் நிலை குழைந்தது
என் நிழல் என்னை
சுடுகிறது அனலாய்
தனிமையின் போதையில்
துயில் எழுகிறேன்
போதி மரம் தேடி
அலைகிறேன் வீதி.. வீதியாய்
அனல் அடுப்பின் மேல்
இட்லியாய் வெந்து
கொள்ளும் இந்த வாழ்கை
கண் இழந்த கரையான் போல்
புற்று ஊன்றி வைத்துள்ளது
இந்த ஏக்கங்கள்
கடிகாரங்கள் கூட
அதன் அளவு ஏற்ப
ஜோடி முட்களாய்
கோட்பாடுகள் கொண்ட
இடைவெளியில்
சுற்றி வருகின்றனவே
ஏனோ என் பொன் நேரம்
போர்வை மூடி
உறங்கி கொண்டது
ஒருமையில் ஓரு பயணம்
பன்மை கொண்ட
கண்களின் நீர்
வீழ்ச்சியில் நினைகிறேன்
அவளை..
தென்படும் தூரத்தில்
அவள் இல்லையே...
எங்கே அவள்...

எழுதியவர் : - ஐ - (22-Apr-19, 11:49 pm)
சேர்த்தது : ஐயெழுத்து
Tanglish : aval
பார்வை : 50

மேலே