ஆழ்மன ஆராய்ச்சி

இருண்ட தேசம்
ஆடைகள் அங்கே
மாயமானது.
மௌனமாக மறைய
தொடங்கியது இரண்டு
வானவில்.
அசைவுகள் அற்ற
அசைவுகளால்
கோடை தேசத்தினை கட்டி
தழுவியது மார்கழி வம்சம்.
காலை நேர உடற்பயிற்சியால்
இரவு நேர உதடுகளில்
வியர்வை துளிகள் வழிந்தோடும்.
மெழுகு உருகியது போலும்
தீபம் பருகியது மேலும்
வெளிச்சம் மெலிந்து
கூச்சம் கசிந்தது.
பட்டினியில் பாதி உறவு
பத்தினியின் ஓர் இரவு.
மயக்கத்தின் மத்தியில்
மயிர் இலை தரவு
அடக்கம் கூடா வட்டியில் சில வரவு.
கடிகார முட்கள்
கூர் பாய்ந்த நேரம்
ஊர் மெல்ல சாய்ந்தது.
அஞ்சுவதற்கு ஐந்து மணித்துளிகள்
கொஞ்சுவதற்கு கொளுத்த நொடிகள்.
புழுக்களாய் நெளிந்து
ஒழுக்கம் தேடியது.
புழுக்கம் தாளாது
அணுக்களாய் மாறி
அடக்கமானது.
வேர் ஊன்றிய பின்
நீர் ஊற்றிய மாயம்.
ஒன்றாய் உருண்ட
தாயங்கள்.
தென்படா காயங்கள்
ஆய கலை மாயங்கள்.
தேய்பிறை தேரோட்டம்
வளர்பிறை சூதாட்டம்
வியர்வை துளிகள் ஓட்டம்
ஒவ்வொன்றாய் வாடி
வடிந்த பின் வாட்டம்.
கோடை குளிரில்
தேகத்திற்கு குளிர் காய்ச்சல்
போர்வை சாய்ந்த பின்
ஆழ்மனத்திற்குள் ஓரு கூச்சல்.
இருண்ட ஆராய்ச்சி கூடத்தில்
இரண்டு ஆராய்ச்சியாளர்கள்
ஆராய்ச்சி முடிந்த பின்
இருவரும் வெட்கம் கொண்டு
புன்னகைத்து கொண்டார்கள்.
மீண்டும் ஓரு ஆராய்ச்சிக்கான
தாட் கூறுகள் அவர்களின்
உதடுகளின் ஓரம்
ஒண்டிகிடந்தான.
🤷‍♂️

எழுதியவர் : ஆராய்ச்சி (22-Apr-19, 11:47 pm)
சேர்த்தது : ஐயெழுத்து
பார்வை : 76

மேலே