மூச்சே மூச்சே

மூச்சே... மூச்சே
முனைத்து கொடு
அவள் முகம் பார்த்து
காதல் சொல்லி செழித்துவிடு
கண்ணின் பொய்யால்
பெண்ணின் மையில்
துடிக்கவும் மறந்துவிடு
கால வேடம்
கோபம் காகிதம்
தினமும் கிழித்துவிடு
பரிதாபம் பாய்விரித்து
ஆகாயம் மடியில்
படுக்கவும் பயந்து நின்றேன்
வெட்கம் கொன்று
சொர்கம் வாங்க
அலைந்து நின்றேன்
கொஞ்சம் ...கொஞ்சம்
காதல் மறந்து
நெஞ்சம் ... நெஞ்சம்
நெகிழ்ந்து வாழவும்
தெரிந்து கொண்டேன்
காதல் இச்சை
கடந்து விட்டேன்
வாழ்கை பிட்சை
ஏந்தி நின்றேன்
உடலினை மறித்து
உயிரை துறக்கவும்
துணிந்துவிட்டேன்
என்னில் ஏனோ
என்னில் ஏனோ...
இத்தனை காயம் அடி
எந்தன் வாழ்வும்...சாவும்
உந்தன் விதியின்படி
முடிவெடு எந்தன்
முடிவின் மூச்சே... மூச்சே