First love Jessie
 
 
            	    
                உன்னோடு நானும் 
பயணித்த காலம் 
வழியெங்கும் கொஞ்சம் மலைச்சாரல் தூவும்
இரு ஜன்னல் ஓரம்
இருள் சூழும் நேரம் 
இரு கரங்களின் இடையில் குறைகின்ற தூரம்....
உன் விழிகள் ஏதோ புது மொழி பேச 
என் நெஞ்சில் குளிர்காற்றும் வீசுதே 
அலைந்தேனே திரிந்தேனே உன் பாதையிலே 
விழுந்தேனே சரிந்தேனே உன் பார்வையிலே
உன்னை  காண  மாலைநேரம் 
காத்திருந்தேன்  சாலையோரம் 
என்  வாழ்வில்  ஏன்  இந்த  மாற்றங்கள் 
சப்தமின்றி  நீ  பேச 
நெஞ்சுக்குள்ளே  புயல்  வீச 
உன்  முன்னே  வந்தால்  எனக்குள்  தடுமாற்றங்கள் 
புத்தகமாய்  இருந்தவன்  என்னை  நூலகமாய்  மாற்றினாய்
hydroflouric  அமிலத்தை  ஏனோ  என்னுள்  நீயும்  ஊற்றினாய் 
உன் விழிகள் ஏதோ புது மொழி பேச 
என் நெஞ்சில்  குளிர்காற்றும் வீசுதே 
அலைந்தேனே திரிந்தேனே உன் பாதையிலே 
விழுந்தேனே சரிந்தேனே உன் பார்வையிலே
திமிராய்  முறைக்கும்  கண்கள்   ஏனோ 
திகைத்து  முழிப்பது  உன்னால்தானோ 
ஒரு  பார்வையாலே  என்னை  நீயும்  சிதறடித்தாய் 
உன்  நினைவுகள்  என்னை  வாட்டி  எடுக்க 
வருவாயோ  என்னை  மீட்டுக்கொடுக்க 
இரு இதழ்கள்  நடுவே  தோன்றும் சிரிப்பில்  சிறைபிடித்தாய் 
உன்னை விட்டு விலகிட நினைத்தால் கால்கள் ரெண்டும் மறுக்கிறதே 
நீ  என்னை காணும் போதெல்லாம் உன் கண்கள்  எதையோ மறைக்கிறதே 
அலைந்தேனே திரிந்தேனே உன் பாதையிலே 
விழுந்தேனே சரிந்தேனே உன் பார்வையிலே
 
                     
	    
                
