புதையல் தேடு

இளைஞனே
நீ விடும் மூச்சுக்காற்று
வெப்பப்பெருமூச்சாய்
வெளிவருகிறதே ஏன்

ஏய்ப்புகள்
குடைபிடிக்கும்போது
வாய்ப்புகள் உனக்குள்
வந்துவடியாதப்பா

உனை பட்டினிபோடும்
பட்டங்களைச் சுமந்தே
வாழ்வுபோனதென
பதறுகிறாயே ஏன்

சுமைகளை சுருக்குப்பைக்குள் அடை
இமைகளை விரி
நீ விட்டெறியும் ஒளியில்
சட்டென்று திறக்கும்
ஆயிரம் சன்னல்கள்

நீ களைப்பாறும் காலம்
கல்லறை தானேப்பா
உதைபட உதைபட
முளைக்கும் புதுவிதை

ஒடிந்து விழுந்த
கைகளுக்கு உரமேற்று
இதயத்தை தூர்வாரி
உனக்குள் தேடு
புதையல்

எழுதியவர் : அ. ராஜா (27-Jun-16, 8:39 pm)
Tanglish : puthayal thedu
பார்வை : 69

மேலே