திரிபங்கி

பத்தரைக் காப்பார் அருந்தமிழ் கேட்பார் பதிந்தபண்ணில்
தத்துவம் சொல்வார் திருத்தமும் செய்வார் துதிப்பவர்க்கு
வித்தக மீவார் திருவருள் பெய்வார் மதிக்குள்சக்தி
அத்தன் அருளே முருகென வந்தே யுதிக்குமன்றோ
இது சிவனைப் பாடிய துதிதான்
பொருளாவது
பத்தரைக் காப்பார் அருந்தமிழ் கேட்பார் பதிந்தபண்ணில்
அவரே பதிந்த பண்ணில் தத்துவம் சொல்வார்
ஆம் திருத்தம் என்ன செய்தார்? சோமநாத பட்டரின் சங்கீத கர்வத்தை அடக்க விறகுசுமந்து விறகுவிற்று திருவிளையாடல் செய்து திருத்தினார் அவரை,, துதிப்பவர்க்கு வித்தகம் தருவார் அல்லவா?,
மதிக்குள் சக்தி அத்தனாகிய சிவபெருமானே அருள அது முருகென (அழகென)
வந்தே உதிக்குமல்லாவா? என்பதே கருத்து…
இதனை 3 பங்காக்கி இப்படியும் பாடலாம் வஞ்சியாக
அதாவது சோமாஸ்கந்த முகூர்த்தம் போல் வரிசையாகப் பாருங்கள்
முன்னிரண்டு சீர்கள் சிவனையும் அடுத்த இரண்டு சீர்கள் முருகனையும், அடுத்த இரண்டு சீர்கள் சக்தியையும் பாடுவதைப் பாருங்கள்
1.பத்தரைக் காப்பார்
தத்துவம் சொல்வார்
வித்தக மீவார்
அத்தன் அருளே
2.அருந்தமிழ் கேட்பார்
திருத்தமும் செய்வார்
திருவருள் பெய்வார்
முருகென வந்தே
கச்சியப்பர் அருந்தமிழைக் கந்தன் கேட்டார் திருத்தமும் செய்வார்
ஆம் அப்படித்தானே கந்தபுராணமே உருவானது
திருவருள் பெய்வார் முருகென (முருகனாய் ) வந்தே
3.பதிந்த பண்ணில்
துதிப்ப வர்க்கு
மதிக்குள் சக்தி
யுதிக்கு மன்றோ
பதிந்த பண்ணில் துதிப்ப வர்க்கு
மதிக்குள் சக்தி யுதிக்கு மன்றோ
இது இன்றும் நடக்கிறதே, ஆம் சக்தி என்பது சக்தி தேவியையும் நமதாற்றலையும் குறிக்குமன்றோ?

எழுதியவர் : சு.அய்யப்பன் (29-Jun-16, 12:47 pm)
பார்வை : 121

மேலே