காதல்
காதல்
உயிரை எடுக்காது
உயிரை கொடுக்கும்
காதல்
மானத்தை வாங்காது
மானம் காக்கும்
காதல்
அழகை பார்க்காது
அழகாய் பார்க்கும்
காதல்
அழ விடாது
அரவணைக்கும்
காதல்
ஆத்திரம் கொள்ளாது
அன்பால் கொல்லும்
காதல்
பொய்யானது இல்லை
உயிரானது
காதலிக்காத
நானே
காவிய காதலை எல்லாம்
படித்து விட்டு
இது தான் காதல்
என்ற வரையறையில்
உள்ளபோது
காதலிக்கும் உங்களுக்கெல்லாம்
இதயத்தை(மனதை) போல்
மூளையும் தொலைந்து விட்டதோ ?
# தயவு செய்து இளம்பெண்கள் யாரும்
தங்கள் புகைப்படத்தை இணையத்தில் பதியாதீர்
# முகம் பெயர்(முன் பின்) தெரியாதவர்களிடம் எல்லாவற்றையும் கொட்டி விடாதீர்
# யாரென்று அறியாதவர்களுடன் பேசுவதை விட
உன் தாய் தந்தை சகோதரி சகோதரன் தாத்தா பாட்டி தோழி உறவினர்களுடன் பாசத்துடன் உரையாடு
உன் உணர்வுகளை பகிர்ந்துகொள்.
அன்பும் வளரும்
பண்பும் வளரும்
மனமும் பண்படும்
# இந்த வயதில்
இப்படி தான் தோன்றும்.
ஊரே செய்கிறது நான் செய்தால் என்ன என்று
காதலிக்க தோன்றும்.
மிகவும் தவறான எண்ணம் அது.
உன் வாழ்க்கையை நீ வென்றெடுக்க வேண்டும்
உன் தாய் தந்தையை நீ பார்த்து கொள்ள வேண்டும்.
காதலியுங்கள்
தவறென்று சொல்லவில்லை.
ஆழமான அடித்தளமிட்டு
பின் காதலியுங்கள்.
ஒருத்திக்கு ஒருவன் என்று
ஒருவனுக்கு ஒருத்தி என்று
உண்மையாக நிலையாக ஆழமாக காதலியுங்கள்
காதல்
பணம் கேட்பதில்லை
மனதை தான் கேட்கிறது
ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்
உன் தாய்
உனை
கருவில் இருந்தே
காதலிக்கிறாள்
அவள்
காதலை
ஏன்
புரிந்து கொள்ள மாட்டேன்
என்கிறீர்கள்
காதலை மாத்திரம் காதலிக்காதீர்
உலகத்தையும் காதலியுங்கள்
உன்னை நீயே முதலில் காதலி
ஒரு ஆண்
ஒரு பெண்
உடல் சேருவது
மாத்திரம்
காதல் அல்ல
அது காதலே அல்ல
உணர்வுகள் சேர வேண்டும்
உள்ளம் சேர வேண்டும்
தூரத்தில்
இருந்தாலும்
உணர்வுகள்(நினைவுகள்)
ஒன்றாய் இருந்து
மனதிலேயே உயிரை
சுமப்பது தான்
உண்மை காதல்
காதலுக்கு நிறைய
வரையறை உண்டு
நீ அதை பூர்த்தி
செய்தாயா ( புரிந்து கொண்டாயா)
என்று முதலில்
சிந்தித்து செயல்படு
உலகம் அழகானது
உயிர்களை நேசிக்கையில்
என்ன இல்லை இந்த உலகில்
மனிதன் மட்டும் தான் கொஞ்சம்
நடிகன்
ஆனால்
கொட்டும் மழையும்
தென்றல் காற்றும்
கடற்கரை மணலும்
நிலவின் ஒளியும்
பூவின் மணமும்
காட்டின் தேகமும்
மலை மேனியும்
ஆகாய பந்தலும்
பூமித்தாயின் மடியும்
மாசற்ற மரகத பசுமை
இயற்கை
காதலியுங்கள்
ஒவ்வொன்றையும் காதலியுங்கள்
அணுஅணுவாய் காதலியுங்கள்
சிறு அணுவையும்
காதலியுங்கள்
உண்மையாய்
~ பிரபாவதி வீரமுத்து