தென்றல் காற்று - குறுங்கவிதை

மெல்லிசைப்பாடி வாசமோடு என்னைத் தொட்டாய்

இதோ என் காதலி தான் வந்துவிட்டாள் என்று

கனவுலகில் இருந்த நான் விழித்தெழுந்தேன்

பின்பு உணர்ந்தேன் என்னைதீண்டியது

அவள் பூங்கரங்களல்ல -அது

ஆற்றங்கரையில் வீசிய இள மாலை தென்றலே

நீதான் என்று ..

எழுதியவர் : வாசவன்-வாசுதேவன்-தமிழ்பி (30-Jun-16, 9:56 pm)
பார்வை : 1494

மேலே