துவிபங்கிஒரே பாடலை இரண்டாகப் பகிர்தல்
மங்கையோர் பாகரோ மாரனைத் தந்தவர்
வெங்கன லேந்திநம் தாரணி காப்பவர்
சங்கமே கொண்டவர் பேரா யிரமாமே
சங்கர நாரா யணர்க்கு
மேலே யுள்ள பாடலும் படமும் பொருத்தம் தானே!
இந்தப் பாடலில்
மங்கையோர் பாகர்- சிவனையும் குறிக்கும் பெருமாளையும் குறிக்கும் எவ்வாறெனின்
மங்கையோர் பாகர் சிவன்
மங்கைமார் பகர் பெருமாள்
மாரனைத்தந்தவர்- மன்மதனைத் தந்தவர் ,எரித்து மீண்டும் உயிர்ப்பித்துத் தந்தவர் என்று சிவனையும்
மன்மதனைப்பெற்றவர் என்று பெருமாளையும் குறிக்கும்,
வெங்கனலேந்திநம் தாரணி காப்பவர்கள் தானே சிவனும் பெருமாளும்
சிவன் கையில் வெங்கனல்
பெருமாள் கையில் அனல் போல் சக்கராயுதம்
சங்கமே கொண்டவர் பேரா யிரமாமே
சங்கரர்க்கு நாராயணர்க்கு!
சிவபெருமான் தமிழ் சங்கம் கண்டார்
பெருமாள்- சங்கம் கையில் கொண்டார்
என்ன இன்னும் வியப்பாக இருக்கிறதா?
இதை அப்படியே 2 ஆகப்பிரித்து வஞ்சியில் பாட
மங்கையோர் பாகரோ
வெங்கன லேந்திநம்
சங்கமே கொண்டவர்
சங்கர னாரா(ம்)-------(1)
அது என்ன
வெங்கனலேந்தி நம் சங்கமே கொண்டவர்?
தருமியிடம் பாட்டனுப்பி வாதிட்ட நக்கீரனை கோபிக்க
கண்களில் வெங்கனல் ஏந்தித்தானே சிவபெருமான் நம் தமிழ் சங்கம் வந்தார்
மாரனைத் தந்தவர்
தாரணி காப்பவர்
பேரா யிரமாமே
நாரா யணர்க்கு---2
இதற்கு விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன்….