முதுமை
அதிரடி விற்பனையில்
ஆயிரம் கால் மண்டபங்களின் இடையே
குதிரை போல்
ஓடியதாம் சொப்பனங்கள்
திருவடி கைகளில் திருஓடு
காசு இட கசக்குதுதப்பா
இடாமல் போனால்
மனசு எது ஏதோ பேசுது தப்பா
வந்தார் எல்லாம் வழி கேட்க்க
வாய் நிரம்ப வழி சொல்லி அனுப்ப
பின் தங்கி போவோம் என்று
முன்தோர் தடம் பிடித்ததில்
எண் கணக்கில் நாள் ஓடிப்போக
நீர் மட்டும் வழி மறந்து
குட்டை போல் தேங்கி நிற்பது ஏனோ ...
அல்லாடி தள்ளாடி
மையத்தை நோக்கி இருந்ததாம்
ஒரு ஆகாசம்... "முதுமை"