கவிதையே யாவும்

XY இல்லா FM உண்டா
(அறிவியல்)

கல் பார்த்தால் கடவுள் இல்லை
கடவுள் பார்த்தால் கல் இல்லை
(பழமொழி)

~ பிரபாவதி வீரமுத்து

திரைப்படப்பாடலில்
பழமொழியை மிகச் சரியாக பாடலாசிரியர் எழுதியுள்ளார்

அது என்ன பழமொழி என்றால்

கல்லை கண்டால் நாயகனை காணோம்
நாயகனை கண்டால் கல்லை காணோம்

அது என்ன பாடல் என்றால்
தசாவதாரம் படத்தில்

கல்லை மட்டும் கண்டால்
கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது


அறிவியலை கவிதையில்
அழகாய் பதிவு செய்துள்ளார்
பாடலாசிரியர்
கஜினி திரைப்படத்தில்

அது என்ன பாடல் என்றால்

X மச்சி
Y மச்சி
FM மிர்ச்சி

நீங்கள் நினைத்திருக்கலாம்
FM என்றால் வானொலி
என்று .

எனக்கு தோன்றியது
என்னவென்றால்

F என்றால் Female
M என்றால் Male
ஆசிரியரும் இதை நினைத்து தான் எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன்.

அறிவியலை பார்ப்போம்:

ஆணின் உயிரணுக்களில் 22
சோமாடிக் குரோமோசோம்களோடு ஒரு X அல்லது Y குரோமோசோம் இருக்கும்.


பெண்ணின் சினைமுட்டையில் 22 குரோமோசோம்களோடு ஒரு X குரோமோசோம் மட்டும் இருக்கும்.
இந்த X , Y குரோமோசோம்கள் தான் பாலினத்தை நிர்ணயிக்கின்றன.

ஆணிடமிருந்து X குரோமோசோம் பெண்ணின் சினை முட்டையை அடைந்தால்
பெண் குழந்தை பிறக்கும்.
அதே போல் Y குரோமோசோம் வந்தால் ஆண் குழந்தை பிறக்கும்.

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (27-Jun-16, 8:52 pm)
Tanglish : kavithaiye yaavum
பார்வை : 117

மேலே