அழகிய தமிழ் மகள் கவிதை போட்டி

சொல்லுக்கழகுத் தமிழ் மொழி
சுண்டி இழுக்குதே உன் விழி.

பூமிக்கழகு பூவனம்
பூத்துக் குலுங்குதே உன் பருவவனம்.

காற்றோடு காதல் செய்யும் பூஞ்சோலை
காதலிக்கத் தூண்டுதே உன் லீலை.

கண்ணுக்கழகு இயற்கைவனம்
கவிதைக்கழகு உன் இடையினம்.

வெள்ளைத்தாள் நிலத்தில் எழுத்து விதைகள்.
விளையாட்டுக்காட்டுதே உன் பருவ வித்தைகள்.

இடையழகில் நிக்குதே வெள்ளிக்குடம்
நடையழகில் தெரியுதே பள்ளிக்கூடம்.

காலடி சுவட்டில் கண்ணயர்ந்து நின்றேனே
காலமகள் கோலத்தை உன்னழகில் கண்டேனே.

ஏழு வண்ணத்தில் எழுந்து நின்றது வானவில்.
ஏகாந்தப் பாவையே தோன்றுகிறாய் என்கனவில்.

வானவில்லைக் கண்டேன் அந்த வானத்தில்.- அதன்
வடிவழகைக் கண்டேன் உன் கோணத்தில்.

அழகிய தமிழ் மகளே - நீயும்
தமிழ் மொழி போலத்தானோ?
தூண்டுகின்றாய்
துள்ள வைக்கிறாய்
தொடுவதற்குள் கலைந்துப் போகின்றாய்.

அழகுக்கெல்லாம் அழகு சேர்ப்பவளே
அலையைப் போல் அழியாமல் என்
ஆழ்மனக் கடலில் அழகாய் தங்கிவிட்டாய்.
ஆனந்தம் இதுவன்றி வேறெதுவோ
அடித்துக் கூறுவேன் இதுவன்றி வேறெதுவுமில்லை

எழுதியவர் : சு.சங்கு சுப்ரமணியன். (29-Jun-16, 1:58 pm)
பார்வை : 320

மேலே