கனவில் அவள்
அவள் வருவாளா
அழகுப் பெட்டகமாக அவள் என்னை கடந்தாள்
ஆயிரம் மொட்டுகள் என் உள்ளே மலர்ந்தன
இன்பம் கொண்டு நான் என்னுள் மகிழ்கையில்
ஈன்றவள் குரல் கேட்டு கண் விழித்தேன்
உள்ளத்தை கவர்ந்தவள் கனவுக்கன்னி என அறிந்து
ஊமைபோல் வார்த்தையின்றி எழுகையில்
என்மனத்தில் இனிமை தந்த அந்தப்பதுமை
ஏக்கம் தீர்க்க வந்தவள்போல் என்முன்னே
ஐயம் போக்க என்னை நான் கிள்ளிட
ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு மீண்டும் மறைந்தாள்
ஓசையின்றி என்மனம் சிறகடித்து பறக்க
ஔவை போல் என் அன்னை என்னை உலுக்க
நின்றபடி நான் கண்ட கனவுதனை
நிஜமாக்க அவள்வரும் நாளை எண்ணி
நினைவுகளில் நிலையின்றி தவிக்கும் என் மனதை
நிலைநிறுத்தி நடந்தேன் குளியறை நோக்கி ....

