கணிதமும் கண்ணீர் வடிக்கிறது

கணித பேராசிரியர்
கண்ணப்பர்
பின்னங்களினால்
கணித எண்களுக்கு
விடை காண
let us assume
if X be 21 + 135 (11919 )
வாட் இஸ் த வேல்யு ஆப் (X)
நீயும் நானும்
கழுதையாக்கப்படுவோம்
என்று
எங்கிருந்தோ
ஒரு குறும்பு குரல்
அடக்கமாக
முடியாத வார்த்தையை
முடித்து வைத்தது..
அங்கே சிரிப்புச் சாரல்
சிதறி விழுந்தது.
வகுப்பறை
வெங்கலக்கடையானது.
மேஜை மத்தளங்கள்
தப்புத்தாளங்களாக
வெகு விமரிசையாக
வாசிக்கப்பட்டதனால்
வகுப்பறைச் சுவர்களும்
தாள வேகத்தில்
தவறாக நர்த்தனம் ஆடின.
கொதித்தெழுந்த
பேராசிரியர் யாரது
CAN YOU PROVE IT என
கணித பாணியில்
கர்ஜனை செய்தார்.
தண்டனை இல்லையேல்
தக்க விளக்கம் தருவேன்
சந்தர்பம் வேண்டுகிறேன்
தயக்கமாக பணிந்து
மர்மக்குரலோன்
மறு மொழி அளித்தான் .
இல்லை இல்லை
தண்டனை இல்லை
தட்டிக்கொடுப்பேன்
பேராசிரியர்
சத்தியம் செய்தார்.
மிதிலைச் சீதைக்காக
வில்லை வளைக்க
அயோத்தி ராமன்
அழகாய் நடந்தது போல்
சமாதானச் சீதையை
கரம் பிடிக்க
அறுவை மன்னன்
அசுவத்தாமன்
கரும் பலகையில்
இப்படித்தான்
எழுதினான் .
IF WE ASSUME
X be 21 +135 (11919 )
தென் யூ அண்ட் மீ
வில் பீ மேட் அஸ் ஆஸ் (ASS )
அதாவது
நீயும் நானும்
கழுதையாக்கப்படுவோம் .
புரியாத புத்திசாலிகள்
புகைந்து புழுங்கினர் .
தப்புத்தாளங்கள்
தட்டிய விரல்கள்
தலைகளில்
தம்பூரா வாசித்தன.
சிண்டுகள் இந்த
சிக்கலில்
சிலிர்த்துக்கொண்டன.
கணித மேதை
கண்ணப்பரோ
கண்ணைக்கட்டி
காட்டில் விட்டது போல்
கண் கலங்கியே
போய்விட்டார்.
பொறுமைக்கும் உண்டோ
பொறுக்கும் தாழ் ?
சிண்டுகள் பிய்க்கப்பட்டு
சின்னாபின்னமாவதை
பொறுக்கமுடியாத
அசுவத்தாமன்
இனியும் சஸ்பென்ஸ்
தாக்குப்பிடிக்காது என்று
மறுபடியும் இப்படி
எழுதினான்.
X BE 21 +135 (11919 )
அதாவது
21 +135 (1 1 9 1 9)என்பது
U + ME (A S S )
நீ +நான் (கழுதை )
எதையும் ASSUME
பண்ணினால்
நீயும் நானும்
கழுதையாக்கப்படுவோம்
அதாவது
முட்டாளாக்கப்படுவோம் .
நம்பர்களுக்கு
விளக்கமளித்தவுடன்
நண்பர்களின்
ஆரவாரம்
விண்ணையே
கிழித்துவிட்டது
போங்கள்!!
இதுவரை
கணித மேதை
கண்ணப்பர் தான்
கண் கலங்கி
நின்றார்.
இப்பொழுது
கணிதமே
கண்ணீர் வடித்தது.
(இது ஒரு ஹாஸ்ய கற்பனையே.)