நசை ஈடேற நான் கற்றுக் கொண்டப் பாடம் 11

வசைபாடும் வாய்களுக்கு
பசை போட்டு ஒட்டத்தான்
நசையோடு காத்திருந்தேன்

நசை ஈடேற
மிசை மேல் ஏறி நின்று
அசையாமல் யோசித்தேன்

திசை எல்லாம் கேட்ட
இசை யாழ் மகிழ்வுற்று
தசை எங்கும் பரவசித்தேன்

வசைபாடும் வாய்களை
கசையால் அடித்தால்
நசை ஈடேறாது என
இசைபாடும் புள்ளினங்கள் -தம்
குரலிசையால் கூறியது

வசைபாடும் வாய்களை -உன்
வாயசைவால் வாழ்த்து
குனிந்திசைந்து நாணிச் செல்லும் -உன்
அசைவாய் மொழி கேட்டு !!!!!!!!!!!!!!!!!!


பிசைந்த உள்ளம்
விசை ஒரு கணம் யோசித்ததும்
நசை ஈடேறியது !!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : பெ. ஜான்சிராணி (4-Jul-16, 6:22 pm)
பார்வை : 82

மேலே