போராட்டம் தான் வாழ்க்கை..
மனக் கடலுக்குள்
அடிக்கிற ஆசை அலைகளில்
கரை அரிக்கிற
நினைவுச் சுவடு
எது காலமே?
படகினில் துடுப்புடன்
தோள் மேல் வலையுடன்
புகுந்த பின்
புயல் புரட்டினால் என்ன
சுனாமி சூழ்ந்தால் என்ன
போராட்டம் தான்
வாழ்க்கையும்...
துடி துடித்துச்
சாகும் முன்
முடிந்தவரை
நீருக்குள் மூழ்குதல்
மீனுக்கும்
நீர் மேல்
தாவுதல்
மனிதனுக்குமாய்...

